அக்டோபர்11ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: அக்டோபர்.11ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எழும்பூர் அசோகா ஓட்டலில் நடைபெறும் என்று ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் 11ம் தேதி மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை, எக்மோர், பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில் 11-10-2023 புதன்கிழமை மாலை 05.00 மணிக்கு நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.

Related posts

அரசு பள்ளிகளில் 6890 ஹைடெக் லேப் நிர்வாகிகள் நியமனம்; பணிகளை வரையறை செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அதிமுக தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் ஒன்றிணைந்து செயல்பட சசிகலா அழைப்பு

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்வரலாற்று வெற்றிக்காக முழு பலத்துடன் களம் இறங்கிய திமுக: தோல்வி பயத்தில் ஒதுங்கியதா அதிமுக? பாஜவுக்கு பலமில்லாததால் பாமக போட்டி