ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் அரசு மருத்துவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு குறித்து 23-10-2009 நாளிட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசாணை எண் 354 நிதி துறையின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டது. ஆனால், இந்த அரசாணை 2011ம் ஆண்டு திமுக ஆட்சியை விட்டு செல்லும் வரை நிறைவேற்றப்படவில்லை. இந்த அரசாணை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் போராடி வருகிறார்கள்.

முதலமைச்சர் இதில் உடனடியாக தனி கவனம் செலுத்தி, முந்தைய திமுக ஆட்சி காலத்தில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 354-ஐ உடனடியாக நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்ட குழு நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்டுள்ள பழிவாங்கும் நடவடிக்கையினை கைவிட வேண்டுமென்றும் அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த சண்டையில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை!!

சென்னை அரும்பாக்கத்தில் கூலிப்படை கும்பல் தலைவன் ராதாவின் கூட்டாளிகள் 12 பேர் கைது!

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாமக சார்பில் அக்கட்சியின் துணைத் தலைவர் சி.அன்புமணி அறிவிப்பு!!