வடகொரியா போருக்கு தயாராகி வருகிறது: அதிபர் ஜிம் ஜாங் உன் அறிவிப்பால் பதற்றம்

பியோங்யாங்: முன்னெப்போதும் இல்லாத வகையில் போருக்கு தயாராகி வருவதாக வடகொரிய அதிபர் ஜிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். வடகொரியா தென்கொரியா நாடுகளின் நீண்டநாள் மோதலால் கொரிய தீபகற்பத்தில் எப்போதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. தென்கொரியாவுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் இணைந்து கூட்டு ராணுவ போர் பயிற்சிகளை நடத்துவது, தென்கொரியாவில் அமெரிக்காவின் குண்டு வீசும் விமானங்கள், அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் போன்ற சக்தி வாய்ந்த ராணுவ தளவாடங்கள் நிறுத்தி வைப்பு போன்ற நடவடிக்கைகள் வடகொரியாவை எரிச்சலடைய வைத்துள்ளது.

இதனால் வடகொரியா குறுகிய ஏவுகணை சோதனை, கண்டம் விட்டு கண்டம் தாவும் நீண்டதூர ஏவுகணை சோதனை, நீருக்கடியில் கதிரியக்க சுனாமிகளை உருவாக்கி அணு ஆயுத இலக்குகளை அழிக்கும் புதிய டிரோன் சோதனைகளை செய்து வருகிறது. இந்நிலையில் வடகொரியாவின் அரசியல் சூழல்கள் பதட்டமாக உள்ளதாகவும் முன்னெப்போதும் இல்லாத வகையில் போருக்கு தயாராகி வருவதாகவும் வடகொரிய அதிபர் ஜிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராணுவ கல்லூரி ஆய்விற்கு பிறகு பேசிய அவர்; “வடகொரியா போருக்கு தயாராகி வருகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் வடகொரியாவிற்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம். ஆனால் இந்த முறை நடத்தப்படும் தாக்குதல் முன்னெப்போது இல்லாத அளவிற்கு மிக தீவிரமாக இருக்கும். இது போருக்கு தயாராக வேண்டிய நேரம்.” இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

மனநலம் பாதிப்பால் காணாமல் போன விமானப்படை அதிகாரி 92 வயது தாயுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்: 33 ஆண்டுக்கு பிறகு ஓய்வூதியமும் கிடைத்தது

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல்

லஞ்ச வழக்கில் பிடிபடும் ஊழியரை விடுவிப்பது உடலில் கேன்சர் செல்லை செலுத்துவது போலாகும்: சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கருத்து