நோபல் பரிசு வென்ற மனித உரிமை ஆர்வலருக்கு சிறை தண்டனை: மாஸ்கோ நீதிமன்றம் உத்தரவு

மாஸ்கோ: உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கி கடந்த 24ம் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இந்த போரில் உக்ரைன் நாட்டை சேர்ந்த பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் குறித்து கருத்து தெரிவித்த மனித உரிமை ஆர்வலருக்கு மாஸ்கோ நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

மனித உரிமைகள் குழ நினைவகத்தின் இணைத்தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மனித உரிமை ஆர்வலர் ஒலெக் ஓர்லோவ் (70). இவர் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் குறித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் ரஷ்ய ராணுவம் குறித்தும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதில் ரஷ்ய ராணுவத்தை இழிவுப்படுத்தி எழுதியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் ஒலெக் ஓர்லோவ்வுக்கு 30 மாத சிறை தண்டனை விதித்து மாஸ்கோ நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

Related posts

நெல்லை மக்களவை தொகுதி; ஸ்ட்ராங்க் ரூம் சாவி தொலைந்ததால் பூட்டு உடைப்பு!

நாடாளுமன்ற தேர்தல் 2024: இந்தியா கூட்டணி 108 தொகுதிகளிலும், பாஜக 85 தொகுதிகளிலும் முன்னிலை

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்குள் முகவர்கள் செல்போன் எடுத்துச் செல்லத் தடை!