அடுத்த மாப்பிள்ளை நாங்க! பொண்ணு இருந்தா தாங்க! காரைக்காலில் ருசிகர பேனர்

காரைக்கால்: காரைக்காலில் நடந்த ஒரு திருமணத்திற்கு வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுவை யூனியன் பிரதேசம் காரைக்கால் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். அருண் பிரசாத்- மதுநிகா. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் நேற்று திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தை வாழ்த்தி அவர்களின் நண்பர்கள் வைத்திருந்த வித்தியாசமான பேனர் அனைவரையும் கவர்ந்தது. அந்த பேனரை நாளிதழ் வடிவில் அச்சிட்டிருந்தனர். அதில் பல்வேறு வாசகங்கள் இடம் பெற்றிருந்தது.

காதலித்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை செய்து வைக்கப்படுகிறது என்றும், கறி கஞ்சி கிடைக்காததால் கைகலப்பில் ஈடுபட்ட நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு என்றும் பேனரில் நண்பர்களின் புகைப்படங்களுடன் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் மணப்பெண் தேவை என்று நான்கு 2கே கிட்ஸ் இளைஞர்கள் தங்களது புகைப்படம் வயது படிப்பு பதிவிட்டு தொழில் வி.ஐ.பி (வேலையில்லா பட்டதாரி) அடுத்த மாப்பிள்ளை நாங்க! பொண்ணு இருந்தா தாங்க! என அச்சிட்டிருந்தனர். 90 கிட்ஸ் பெண்கள் கிடைக்காத சூழ்நிலையில் தற்போது 2கே கிட்ஸ்களும் பெண்கள் கேட்டு பேனர் வைத்தது அப்பகுதியில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

அதிமுகவில் பிரிந்து இருப்பவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம் ஓ.பன்னீர்செல்வம்

புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை தகவல்

புத்தாக்கத் தொழில் திட்டத்தால் பட்டியலின – பழங்குடியின இளைஞர்கள் இந்தியாவிலேயே முதல் முதலாக தொழில் முகவர்களாக உயர்ந்து சாதனை!!