புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய கற்போர் மையங்களுக்கு விருது: அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்குகிறார்

சென்னை: 2022-23ம் ஆண்டில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய கற்போர் மையங்கள் முதன்மை கல்வி அலுவலர்களுடைய பரிந்துரையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மையங்களுக்கு விருது வழங்கும் விழா வருகிற 4ம் தேதி (வெள்ளிக்கிழமை) மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக மாநாட்டுக் கூட்ட அரங்கில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடக்கிறது.

அந்த வகையில், கற்போர் மைய பள்ளி தலைமை ஆசிரியர், தன்னார்வலர் மற்றும் சார்ந்த மைய ஆசிரியர் பயிற்றுனர் ஆகியோருக்கு விருது, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 3 கற்போர் மையங்கள் என 38 மாவட்டங்களுக்கு 114 மையங்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த மையங்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருது, பதக்கம், சான்றிதழ் வழங்குகிறார்.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்