புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே மரம் சாய்ந்தது நெல்லையில் காற்றுடன் திடீர் மழை-வெப்பம் தணிந்து குளிர்ச்சி

நெல்லை : நெல்லையில் நேற்று மாலை காற்றுடன் திடீரென மழை பெய்தது. காற்று காரணமாக புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே வேப்ப மரம் ரோட்டில் சரிந்தது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது.தமிழ்நாட்டில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலம் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். தற்போது அக்னி நட்சத்திர காலம் என்பதால் கடந்த சில நாட்களாக கத்தரி வெயில் வாட்டி வதைத்து வந்தது. நெல்லையில் கடந்த சில நாட்களாக 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவானது. பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்லவே அஞ்சினர். கடந்த சில நாட்களாக பகல் வேளையில் அனல் காற்று வீசியது.

நேற்றும் பகலில் கடுமையான வெப்பம் தகித்தது. ஆனால் பிற்பகல் 2 மணிக்கு பிறகு வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, விஎம் சத்திரம், தியாகராஜநகர், மகாராஜநகர், புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடும் காற்றுடன் மழை பெய்தது.

காற்று காரணமாக நெல்லை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே வேப்ப மரம் ரோட்டில் சரிந்தது. உடனடியாக வெட்டி அப்புறப்படுத்தப்பட்டதால் போக்குவரத்து சீரானது. இதேபோல் பாளை. வஉசி மைதானத்தில் கேலரி சரிந்தது. பொதுமக்கள் யாரும் அப்பகுதியில் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கடும் காற்று காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்தன. மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. திடீர் மழையால் கடந்த சில நாட்களாக நிலவிய வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது.

Related posts

முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீர் திறப்பு

அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பகிரும் அவலம்; எல்லை மீறும் யூடியூபர்களால் அதிகரிக்கும் தற்கொலைகள்: காற்றில் பறக்கிறது தனிமனிதனின் பிரைவசி

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை