கிளம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: கிளம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அணைக்கப்பட்டு வருகிறது. கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்ற பெயரில் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். .

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய பேருந்து நிலையம் கொண்டுவரப்படுகிறது. இந்த புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க வுள்ளதாகா அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்கா ரூ.5 கோடியில் மேம்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் மருத்துவ சிகிச்சை மையத்துடன் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

சென்னை மாநகராட்சிக்கு நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாத 100 பேரின் பட்டியல் இணையத்தில் வெளியீடு

மாஞ்சோலையை தமிழ்நாடு அரசு எடுத்து நடத்த வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் பேட்டி

கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழ காரணம்: கார்கே