இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது!

சென்னை: 2024-25ம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வை ஒன்றரை லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த 12,730 மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர். நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது.

நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் ஹால்டிக்கெட்களில் தெரிவித்துள்ள நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை ‘நீட்’ நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2024-25-ம் கல்வியாண்டு மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு, இன்று (05.05.2024) நடக்கிறது.

இந்த தேர்வை, தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவிகள் உள்பட நாடுமுழுவதும் 24 லட்சம் பேர் எழுதுகிறார்கள். தேர்வானது, பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடைபெறவுள்ள இத்தேர்வை, தமிழ்நாட்டில் 1.5 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர்.

 

Related posts

அயலகத் தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வோருக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு தகவல்

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிப்பு!

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கைது வாரண்ட்