நவராத்திரியின்போது மீன் சாப்பிடும் தேஜஸ்வி யாதவ்: பாஜவினர் கண்டனம்

பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் தன் ட்விட்டர் பதிவில் ஒரு காணொலியை பதிவிட்டுள்ளார். அதில், தேஜஸ்வி யாதவும், ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணி கட்சியான விகாஷீல் இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் அமைச்சருமான முகேஷ் சாஹ்னியும் சில ரொட்டி துண்டுகளை செக்ரா என்ற மீன் வறுவல் துண்டுகளுடன் ருசித்து, வேகமாக சாப்பிடும் காட்சிகள் உள்ளன. இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நவராத்திரி நேரத்தில் மீன் வறுவல் சாப்பிடும் தேஜஸ்வி யாதவுக்கு பாஜவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தேஜஸ்வி யாதவ், “நவராத்திரிக்கு முந்தைய 8ம் தேதி தான் நான் மீன் சாப்பிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related posts

பலாப்பழக்காரரின் ரகசிய ஆலோசனை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கொடைக்கானல் ஏரிக்குள் பாய்ந்த கார்

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் பலி 2 விசாரணைக்குழு அமைப்பு