ஆசிரியர்கள் 2 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது: தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து

சென்னை: தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட வாழ்த்து செய்தி: சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தென் தமிழக மண்ணிலிருந்து இருவர் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமாருக்கும், தென்காசி மாவட்டம் கீழ்ப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை மாலதிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

நெல்லை – சென்னை சிறப்பு ரயில் ஜூன் மாதம் முழுவதும் நீட்டிப்பு: பயணிகள் மகிழ்ச்சி

கன்னியாகுமரியில் 3 நாள் தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் நரேந்திரமோடி

திருவள்ளூர் காக்களூரில் பெயிண்ட் ஆலை தீ விபத்தில் இறந்த 4 பேரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்