நந்தா பொறியியல் கல்லூரியில்‘ரிதம் 2023’ ஆண்டு விழா

 

ஈரோடு, ஏப்.23: ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியின் ‘ரிதம் 2023 ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஸ்ரீ நந்தா கல்விஅறக்கட்டளை தலைவர் சண்முகன் விழாவிற்கு தலைமை தாங்கினார். ரூட்ஸ் தொழில் நிறுவனத்தின் இயக்குநர் கவிதாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இவ்விழாவில், கல்லூரி முதல்வர் ரங்கராஜன் நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள், ஆசிரியர்களின் பல்வேறு சாதனைகள் குறித்து ஆண்டறிக்கையை வாசித்தார். ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம், நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் நிர்வாக அதிகாரி வேலுசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக நந்தா தொழில் நுட்ப வளாகத்தின் இயக்குனர் செந்தில் ஜெயவேல் வரவேற்புரையாற்றினார். விழாவில் டிபென்ஸ் அகாடமியின் இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் சின்னசாமி ஜெயவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைப்பட நடிகர் கவின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விழா ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Related posts

தொழில் நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை 7 மணி நேரம் பாதிப்பு; அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் இயல்புநிலை திரும்பியது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே கழிவறை வசதியுடன் கூடிய மின்சார ரயில் விரைவில் அறிமுகம்

28 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 185 சவரன், 398 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு: ஆவடி காவல் ஆணையர் வழங்கினார்