28 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 185 சவரன், 398 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு: ஆவடி காவல் ஆணையர் வழங்கினார்

ஆவடி, மே 16: ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 185 சவரன், 398 செல்போன்கள், பணம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட 24 காவல் நிலையங்களில் 2023-24ம் ஆண்டில் நடந்த கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 28 குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 185.3 சவரன் தங்க நகைகள், 398 செல்போன்கள், ₹4,67,500 ரொக்கப் பணம் மற்றும் 5.3 கிலோ வெள்ளி நகைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி திருமுல்லைவாயிலில் அமைந்துள்ள போலீஸ் கன்வென்சன் சென்டரில் நேற்று நடந்தது. இதில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் தலைமை தாங்கினார். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும், ‘விசிபல் போலீஸ்’ என்ற முறையில் காவலர்கள் நடந்தே ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு முழுவதுமாக குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ஆணையர் சங்கர் கூறினார்.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது