‘நகம்’ நலமறிய ஆவலா?!

நீண்ட விரல்களுடைய பெண்கள் தங்கள் நகங்களை அழகுபடுத்த விரும்பினால் நகங்களின் மையப்பகுதியை பிறைச் சந்திர பிம்பத்தைப் போன்ற அளவில் உள் வளைவாக வெட்டிவிட்டுக்கொள்ளலாம்.வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டி இருந்தால் நகப்பூச்சை முற்றிலும் அகற்றி விட்டு வெற்று நகங்களுடன் இருப்பது நகத்தின் செல்களுக்கு இயற்கையான காற்று கிடைக்க வழி செய்யும். என்னதான் அழகு என்றாலும் நெயில் பாலிஷ்கள் உடலுக்குத் தீமை விளைவிக்கும் கெமிக்கல் கொண்டவை என்பதால் சாப்பிடும் கைகளிலும் நெயில் பாலிஷ்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். மேலும் குழந்தைகளுக்கும் கூட மருதாணி, பீட்ரூட் உள்ளிட்ட இயற்கை பாலீஷ்களைப் பயன்படுத்தலாம். கோயில் போன்ற புனிதமான இடங்களுக்கு செல்லும் போது நகங்களில் பூச்சு இல்லாமல் சென்றால் நன்மதிப்பை தரும். நகப்பூச்சு வேண்டும் என விரும்புபவர்கள் நகங்களின் இயற்கை நிற பாலீஷை பயன்படுத்தலாம்.

விரல் நகங்களில் பாதாம் எண்ணெயை தளரப்பூசி அரைமணி நேரம் வைத்திருந்து பிறகு கடலைமாவைக் கொண்டு நகங்களைச் சுத்தம்செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நகங்கள் பிரகாசமாக இருக்கும்.திருமணம் போன்று குடும்ப விசேஷங்களுக்கு செல்லும்போது அழுத்தமான வண்ணங்களை நகத்தில் நகப்பூச்சு செய்தால் அழகாய் இருக்கும்.லேசான வண்ண அமைப்புடைய நகபாலீஷ்களை எந்த மாதிரி உடல் நிறமுடைய பெண்கள் பயன்படுத்தினாலும் நன்றாய் தோன்றும்.கறுத்த உடல் நிறம் கொண்டவர்கள் இயற்கை வண்ணத்தைப் பிரதிபலிக்கும் நகப்பாலீஷை உபயோகித்தால் எடுப்பாகவும், அழகாகவும் இருக்கும். ஆழ்ந்த வண்ணங்களில் நகங்களில் பூச்சுகளை செய்யக்கூடாது.மருதாணி இலையை மைபோன்று அரைத்து கைவிரல்களுக்கும், நகங்களுக்கும் பூசினால் நகங்களும், விரல்களும் நல்ல சிவந்தநிறம் பெறும். மேலும் உடலும் குளிர்ச்சி பெறுவதால் பல ஆரோக்கியம் சார்ந்த பயன்களைப் பெறலாம்.

– காகை ஜெ. ரவிக்குமார்.

Related posts

22-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வும் பகுதி உருவாகிறது: வானிலை மையம் தகவல்

தமிழகம், கேரளாவில் மலைப்பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்கவும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

தொடர் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதல்