ஒரே நாடு, ஒரே இட்லி என சுடப்பார்க்கிறார் மோடி; நடிகர் கருணாஸ் கலாய்

மதுரை: தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனருமான கருணாஸ் நேற்றிரவு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மக்களின் வரிப்பணத்தை மக்களுக்கே கொடுக்க வேண்டும் என நினைக்கும் இந்தியா கூட்டணி வேண்டுமா அல்லது பெரு முதலாளிகளுக்கு கடனாக கொடுக்கும் பாஜ வேண்டுமா என நினைவில் கொண்டு வாக்களிக்க வேண்டும். பாஜக மத ரீதியாக அரசியல் செய்கிறது.

தாய்மொழி தமிழை மறந்து இந்தியை பேச சொல்கிறது. இந்த தேசத்தை, மொழியை அழிக்க நினைக்கிறார் மோடி. ஒரே நாடு, ஒரே இட்லி என சுட பார்க்கிறார். அதற்கு ஒரு போதும் இடம் கொடுத்து விடக்கூடாது.படர் தாமரை வந்தால் உடம்பு நாசமாகும். ஆகாயத்தாமரை படர்ந்தால் குளம் நாசமாகும். மீண்டும் பாஜக வந்தால் இந்த நாடே நாசமாகும்.மதத்தின் பெயரால் சமுதாயத்தை பிளவுபடுத்தி அரசியல் செய்யும் மோடி அரசு வீழ்த்தப்பட வேண்டும் என்றார்.

Related posts

உடல் நலம் தேறி வரும் பெண் யானை!

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்தத்திற்கு அழைப்பு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்

சென்னையில் தாய்ப்பால் விற்பனை தொடர்பான கண்காணிப்பை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த 11 குழுக்கள் அமைப்பு!!