தேர்தல் விதிகளை மீறியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது வழக்கு

சென்னை: தேர்தல் விதிகளை மீறி சாலையை சேதப்படுத்தி கொடி கம்பம் நட்டதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அளித்த புகாரின் படி நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி மேற்கு மாம்பலம் ரெட்டி குப்பம் சாலையில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

கூட்டத்திற்கு சைதாப்பேட்டை நாம் தமிழர் கட்சி நிர்வாகி சுகுமாரன் ஏற்பாடு செய்திருந்தார். கூட்டம் நடந்த சாலையின் இருபுறமும் தேர்தல் விதிகளை மீறி சேதப்படுத்தி கொடி கம்பங்கள் நட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி கார்த்திகேயன், குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் சைதாப்பேட்டை நாம் தமிழர் கட்சி நிர்வாகி சுகுமாரன் மீது பொது சொத்துக்களை சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து ராகுல் காந்தி பேரணி

கேரள மாநிலம் இடுக்கியில் நெடுஞ்சாலை பணியின்போது மண் சரிந்து விபத்து: காயங்களுடன் மீட்கப்பட்ட இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை

நடப்பு நிதியாண்டின் முதல் 2 மாதங்களில் ஐபோன் ஏற்றுமதி உச்சம் : ஃபாக்ஸ்கான் ஆலையில் 65% விஸ்ட்ரான் ஆலையில் 24% ஐபோன்கள் உற்பத்தி!!