10,000 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கிய மியான்மர் ராணுவ அரசு

பாங்காக்: மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது.பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்று 76வது ஆண்டை குறிக்கும் வகையில் சிறை கைதிகளுக்கு ராணுவ அரசு மன்னிப்பு வழங்கியுள்ளது. மியான்மர் ராணுவ குழுவின் தலைவர் ஜெனரல் மின் அவுங் ஹிலியாங், சிறைகளில் உள்ள 9,652 கைதிகளை விடுதலை செய்வதாக அறிவித்துள்ளார். மியான்மரில் ராணுவத்துக்கு எதிராக போராட்டிய ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர்.

அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டார்களா என்பது பற்றி தகவல் தெரியவில்லை. கடந்த 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி லீக் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 2021ம் ஆண்டு அரசு கவிழ்க்கப்பட்டு ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் ஆங்சான் சூகியை வீட்டுக் காவலில் வைத்தது. ராணுவத்தால் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவருக்கு 27 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Related posts

தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரம் உருவாக்க முடியாது: அமைச்சர் ரகுபதி பேட்டி

ராணுவப் பள்ளியில் ஆசிரியர்,லேப் அசிஸ்டென்ட்

விமானப்படையில் அதிகாரி பணியிடங்கள் : பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பு