நெல்லை-சென்னை வந்தே பாரத் பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி

சென்னை: நெல்லை- சென்னை இடையே நாளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார். இதற்காக, தமிழக மக்கள் சார்பில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது டிவிட்டரில், ‘‘தென் தமிழகத்தின் முதல் மற்றும் தமிழகத்திற்கான 3வது வந்தே பாரத் ரயிலை நெல்லை- சென்னை இடையே நாளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார். பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ரயில் தென் தமிழகத்தையும், தலைநகரமான சென்னையையும் குறைந்த நேரத்தில் இணைக்கிறது. வந்தே பாரத் ரயில் அதிவேகம் மட்டுமல்லாது, அதிநவீன பாதுகாப்பு முறைகளுடன் சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலையில் தயாராகி உள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஏழை மக்களுக்கு 3 கோடி வீடுகள் கட்ட நிதியுதவி வழங்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்!

சோழவரம் ஏரி கால்வாயை ஆக்கிரமித்துள்ள ஆகாயதாமரையை அப்புறப்படுத்த வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

பள்ளிகள் திறப்பு எதிரொலி: திருவொற்றியூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்