முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் இலங்கை செல்ல அனுமதி: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை முடிந்து விடுதலையான முருகன், லண்டன் செல்ல விசா எடுக்க அடையாள அட்டை வழங்குமாறு மறுவாழ்வு இயக்குனருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளது. ஒரு வாரத்தில் ஒன்றிய அரசு அனுமதி அளித்தவுடன் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறினார். இதை பதிவு செய்த நீதிபதிகள், அடையாள அட்டை தேவையில்லை எனக்கூறி மனுவை முடித்து வைத்தனர்.

Related posts

ஒடிசா மாநிலம் ஊழல்வாதிகளின் கைகளில் சிக்கி இருக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

திருச்செந்தூரில் நாளை மறுநாள் வைகாசி விசாகம்: பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு சுற்றுசூழல் அனுமதியை வழங்கியது தமிழ்நாடு அரசு