திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் வருமானம் ரூ.2.49 கோடி

திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் வருமானமாக ரூ.2.49 கோடி கிடைத்துள்ளது. அத்துடன் 1 கிலோ தங்கம், 24 கிலோ வெள்ளி பொருட்களும் கிடைத்துள்ளன.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. அதன்படி கோயில் வசந்த மண்டபத்தில் நேற்று முன்தினம் கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையாளர் கார்த்திக் முன்னிலையில் உண்டியல்களை திறந்து எண்ணும் பணி நடந்தது.

இதில் தூத்துக்குடி உதவி ஆணையாளர் செல்வி, கோயில் அலுவலக கண்காணிப்பாளர் ரவீந்திரன், ஆய்வர் செந்தில்நாயகி, அறங்காவலர் குழுத்தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன் மற்றும் சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேத பாடசாலை உழவார பணிக்குழுவினர், கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

இதில் மொத்தம் 2 கோடியே 49 லட்சத்து 44 ஆயிரத்து 699 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியது தெரியவந்தது. மேலும் 1 கிலோ 100 கிராம் தங்கம், 24 கிலோ வெள்ளி, 326 வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவற்றையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

Related posts

பயணிகள் ரயிலில் திடீர் தீ

தொடக்க நாளான ஜூன் 6ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பதிவு வழங்கும் சிறப்பு திட்டம்: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் உத்தரவு

12 வயது மாணவி பலாத்காரம்; கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டு கடுங்காவல்: கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு