ரஷ்ய ராணுவ நிருபர் படுகொலை: 26 வயது இளம் பெண் கைது

மாஸ்கோ: ரஷ்ய ராணுவ நிருபர் படுகொலை தொடர்பாக இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் ராணுவ நிருபரான விளாட்லன் டட்டர்ஸ்கி(40) தங்கியிருந்தார். நேற்று முன்தினம் அந்த ஓட்டலில் ரஷ்யா-உக்ரைன் போர் குறித்த விவாதத்தில் டட்டர்ஸ்கி பங்கேற்றார். அப்போது போர் தொடர்பான பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. அதற்கு டட்டர்ஸ்கி பதிலளித்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஓட்டலில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. இதில்,டட்டர்ஸ்கி பலியானார். 25 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து புலனாய்வு அதிகாரிகள் கூறும்போது, ‘‘செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது’’ என்றனர். ரஷ்ய செய்தி நிறுவனமான இன்டர்பாக்ஸ் தெரிவிக்கையில், சந்தேகப்படும் ஒரு நபர் டட்டர்ஸ்கியிடம் சிலையை பரிசாக கொடுத்துள்ளார். டட்டர்ஸ்கி அந்த சிலையை எடுத்து தன் அருகில் வைக்கும் போது அது திடீரென வெடித்தது என கூறியது. இதனிடையே, டட்டர்ஸ்கி படுகொலை தொடர்பாக பீட்டர்ஸ்பர்க்கை சேர்ந்த டார்யா டிரையோபோவா(26) என்ற இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய போலீஸ் தெரிவித்துள்ளது.

Related posts

திருப்பத்தூரில் பல மணி நேர போராட்டத்திற்கு பின் பிடிபட்டது சிறுத்தை

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது ஜெர்மனி

காரில் மண்டை ஓடுகளுடன் வந்த அகோரியால் பரபரப்பு