மூணாறு அருகே சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இரண்டாம் மைல் வியூ பாயிண்ட்

மூணாறு: மூணாறு அருகே, தேயிலை தோட்டங்களின் நுழைவு வாயிலாக இருக்கும் இரண்டாம் மைல் வியூ பாயிண்ட் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சுற்றுலாத் தலமாக அமைந்துள்ளது. கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறிலிருந்து இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் கொச்சி-தனுஷ்கோடி தேசிய ெநடுஞ்சாலையில் இரண்டாம் மைல் வியூ பாயிண்ட் அமைந்துள்ளது. இப்பகுதி மூணாறின் தேயிலைத் தோட்டங்களின் நுழைவாயிலாக திகழ்கிறது.

இந்த வியூ பாய்ண்ட் மூணாறின் சிறந்த சூரிய அஸ்தமன இடமாக விளங்குகிறது. இங்கு மேகமூட்டங்கள் மூடிய மலைகள், பசுமையான பள்ளத்தாக்குகளின் அழகிய காட்சிகள் மற்றும் குளிர்ந்த காற்றின் அரவணைப்பை அனுபவிக்க முடியும். மேலும் இங்கிருந்து செங்குளம் அணைக்கட்டு மற்றும் இடுக்கி அணைக்கட்டுகளின் தொலை தூர கட்சிகளையும் பார்த்து ரசிக்கலாம்.

Related posts

போக்சோ வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராகிறார் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா

மேகவெடிப்பு காரணமாக சிக்கிமில் பெருவெள்ளம், நிலச்சரிவு: சுற்றுலாப் பயணிகளை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரம்

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு