மும்பை, டெல்லியை போன்று சென்னை, கோவையில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அமைச்சர் முத்துசாமி தகவல்

கேள்வி நேரத்தின் போது அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார்(திமுக) : அணைக்கட்டு பகுதியில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தர வேண்டும்.
துணை சபாநாயகரும், கீழ்பெண்ணாத்தூர் எம்எல்ஏவுமான கு.பிச்சாண்டி: மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் கட்டுப்படும் 20, 30 அடுக்குமாடி குடியிருப்புகள் போல சென்னை, மதுரை, கோவையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுமா?
வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி: சட்டமன்ற உறுப்பினர் கூறும் ஆலோசனை வரவேற்கத்தக்கது. இருந்த போதிலும் பல்வேறு நகரங்களில் ‌அடுக்குமாடி குடியிருப்புகளில் 8000 வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன. அதனால் தேவைப்படும் இடங்களில் மட்டுமே குடியிருப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேவேளையில் சென்னை, கோவை போன்ற நில நெருக்கடியான இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான இடங்கள் இல்லாமல் இருந்தாலும் அரசாங்கம் இடம் இருந்தால் அதனை வாங்கி நாம் வீடுகள் கட்டித்தரலாம்’’ என்றார்.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்