மக் கேக்

தேவையானவை

பிரவுன் சுகர் – 1 மேசைக்கரண்டி
பீனட் பட்டர் – 2 மேசைக்கரண்டி
மைதா மாவு – 1 மேசைக்கரண்டி
கோக்கோ – 1 மேசைக்கரண்டி
முட்டை – 1
பேக்கிங் பவுடர் – 1/4 தேக்கரண்டி
சாக்லேட் சிப்ஸ் – கைப்பிடியளவு.

செய்முறை

ஒரு மக்கில் பிரவுன் சுகர், பீனட் பட்டர், கோக்கோ, மாவு, முட்டை மற்றும் பேக்கிங் பவுடரைக் கொட்டி, ஃபோர்க்கால் நன்றாக கலக்கவும். அதில் சாக்லேட் சிப்ஸைக் சேர்க்கவும். கேக் உப்புவதற்கு போதுமான இடம் இருப்பதை சரிபார்த்து ஒரு நிமிடத்திற்கு மைக்ரோவேவில் வைத்து எடுத்தால் சுவையான மக் கேக் ரெடி!

Related posts

சாமை மிளகு பொங்கல்

பிளாக் கரன்ட் ஐஸ்கிரீம்

வேர்க்கடலை பேடா