எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் விண்ணப்ப பதிவு நிறைவு

சென்னை: எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு நேற்றுடன் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் உள்ள 38 அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள், 2 அரசு பி.டி.எஸ். கல்லூரியில் உள்ள இடங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என அனைத்து இளநிலை மருத்துவ படிப்பு இடங்களும் கலந்தாய்வு மூலம் வருடம் தோறும் நிரப்பப்பட்டு வருகிறது. நடப்பாண்டில், தமிழகத்தில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 516 பேர் நீட் தேர்வு எழுதியதில் 78 ஆயிரத்து 693 பேர் தேர்ச்சி பெற்றனர். எனவே நீட் தேர்வில் வெற்றிப்பெற்ற மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு தயாராகி வருகின்றனர். மாணவ-மாணவிகள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் மூலம் விண்ணப்பித்து வந்தனர். இந்நிலையில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகான விண்ணப்ப பதிவு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. 40 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்