“பசி நீக்கும் செயல் கழிவறையை நிரப்பும் செயலாக தினமலருக்குப் படுகிறது” :சு. வெங்கடேசன் எம்.பி கடும் விமர்சனம்!

சென்னை : காலை உணவு திட்டத்தை விமர்சித்து செய்தி வெளியிட்ட தினமலருக்கு எம்.பி., சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டம் குறித்து நாளிதழ் வெளியிட்டுள்ள விமர்சனத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், சூத்திரனுக்கு கல்வி தருவது
புண்ணிலிருந்து வரும் சீழைக் குடிப்பதற்குச் சமம்…
என்று அன்று
கூறியவர்கள்
அதே வன்மத்தோடு இன்றும்.

பசி நீக்கும் செயல்
கழிவறையை நிரப்பும் செயலாக
தினமலருக்குப் படுகிறது.

சனாதனக் கருத்தியலின் பல்லைப்பிடுங்கும்
கூரியஆயுதம் கல்வி.

கற்போம்.
கற்பிப்போம்,” என்று குறிப்பிட்டுள்ளார்

Related posts

அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பகிரும் அவலம்; எல்லை மீறும் யூடியூபர்களால் அதிகரிக்கும் தற்கொலைகள்: காற்றில் பறக்கிறது தனிமனிதனின் பிரைவசி

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது