அதிக முறை டக் அவுட்டாகி சாதனை

மொஹாலி: மொஹாலியில் நடந்த ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் குவித்தது. இதையடுத்து பேட்டிங் செய்த மும்பை அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டம் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு 200வது போட்டியாகும். எனவே அவரை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்தனர். ஆனால் ரிஷி தவான் வீசிய முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா டக் அவுட்டாகி வெளியேறினார். ஐபிஎல் தொடரில் அவர் டக் அவுட்டாவது இது 15வது முறையாகும். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட்டான வீரர்களின் பட்டியலில் முதலிடத்திற்கு ரோகித் சர்மா முன்னேறியுள்ளார். இவருடன் தினேஷ் கார்த்திக், மன்தீப் சிங் மற்றும் சுனில் நரைன் ஆகியோரும் 15 முறை டக் அவுட்டாகி முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

Related posts

அதிகாரிகளை லாரி ஏற்றி கொல்ல முயன்றவர்களை கைது செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் அன்புமணி வலியுறுத்தல்

தென் திருப்பதி- திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

பாஜவுடன் கூட்டணி வைக்கவே அதிமுக தேர்தல் புறக்கணிப்பு: வாக்குச்சாவடியை கைப்பற்றும் கலாச்சாரத்தை தொடங்கியதே அதிமுக தான்; ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேட்டி