புழல் ஒன்றியத்தில் கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம்

புழல்: புழல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் ஒன்றிய குழு தலைவர் தங்கமணி திருமால் தலைமையில், கூட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஒன்றிய குழு துணை தலைவர் சாந்தி பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணி சேகர், சித்ரா பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றியத்துக்கு உட்பட்ட வடகரை, அழிஞ்சிவாக்கம், கிரான்ட் லைன், விளாங்காடுபாக்கம், சென்றம்பாக்கம், புள்ளி லைன், தீர்த்தங்கரையம்பட்டு ஆகிய 7 ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, மின்விளக்கு வசதிகள் குறித்தும், கட்டிடங்கள் கட்டுவதற்கு தடையில்லா சான்று வழங்குவது குறித்தும் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், ஒன்றிய கவுன்சிலர்கள் சிவக்குமார், மல்லிகா மீரான், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

20 அணிகள் பங்கேற்கும் டி.20 உலக கோப்பை தொடர் நாளை தொடக்கம்: 27 நாட்கள் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து

வெயிலின் தாக்கத்தால் மின்சார தேவை அதிகரித்துள்ள நிலையில் டான்ஜெட்கோ தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

நோயாளிகளுக்கு ஒரே ஊசி பயன்படுத்திய விவகாரம் : இணை இயக்குனர் விசாரணை!!