ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு பூக்களின் விலை ‘கிடுகிடு’ உயர்வு: ஒரு கிலோ மல்லி ரூ.500, முல்லை ரூ.350

சென்னை: ஆடி மாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆடி முதல் வெள்ளி என்பதால் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் நேற்று காலை அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி ரூ.500, முல்லை, ஜாதிமல்லி, ஐஸ் மல்லி ரூ.350, கனகாம்பரம் ரூ.300, சாமந்தி ரூ.240, சம்பங்கி ரூ.180, பன்னீர் ரோஸ் ரூ.100, சாக்லேட் ரோஸ் ரூ.80, அரளி ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘‘இன்று ஆடி முதல் வெள்ளி என்பதால், கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளது. விசேஷ நாட்கள் முடிந்த பிறகு மீண்டும் அனைத்து பூக்களின் விலை படிப்படியாக குறையும்.’’ என்றார்.

Related posts

சென்னை விமான நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என இமெயில் மூலம் மிரட்டல்

தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

அருணாச்சலப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 10 வெற்றி உள்பட மொத்தம் 31 இடங்களில் முன்னிலை