மோடி மீண்டும் வரக்கூடாது; சுட்டுக்கொலை செய்யப்பட்டவரின் அஸ்தியுடன் விவசாயிகள் பிரசாரம்

டெல்லி நோக்கி பேரணி சென்ற விவசாயிகள் மீது பஞ்சாப் எல்லையில் வைத்து அரியானா போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுப்கரன் சிங் (21) என்ற இளம் விவசாயி உயிரிழந்தார்.இவருடைய அஸ்தியை அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு சென்று விவசாயிகள் ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் கோல்டன் சிங் என்பவரின் தலைமையில் நேற்று இளம் விவசாயி அஸ்தியுடன் கோவைக்கு வந்தனர்.

பின்னர் நிருபர்களிடம் கோல்டன் சிங் கூறுகையில், ‘அஸ்தி கலசத்தை இந்தியா முழுவதும் எடுத்துச்சென்று மோடி அரசின் அராஜகத்தை நாடு முழுவதும் காட்ட அனைத்து மாநிலங்களுக்கும் செல்கிறோம். அனைவரும் ஒன்றிணைந்து இந்த அரசை மீண்டும் வரவிடாமல் செய்ய வேண்டும்’ என்றார்.

Related posts

ஜூன் 13: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

பலாப்பழக்காரரின் ரகசிய ஆலோசனை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கொடைக்கானல் ஏரிக்குள் பாய்ந்த கார்