மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்க அமைச்சர் செந்தில் பாலாஜி நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடந்த அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “அதன்படி மின்வாரிய ஊழியர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

ஊதிய உயர்வு வழங்குவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.527 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகும். ஊதிய உயர்வு மூலம் 75,978 ஊழியர்கள், பணியாளர்கள் பயன்பெறுவர். ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசு சார்பில் ஏற்கப்பட்டு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் 10 ஆண்டுகள் பணிமுடித்த ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் 3 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும்” என்றார்.

Related posts

ஆந்திர மாநில டிஜிபி நீக்கம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

தென் மாவட்டங்களில் காற்றாலை மின் உற்பத்தி தொடக்கம்

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஜே.பி.நட்டா மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்