அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்த அவருக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

உடனே அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும் அவருக்கு இதய பிரச்ினை தொடர்பாக சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மருத்துவர்களின் முழு கண்காணிப்பில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இருப்பதாகவும், பரிசோதனைகளின் முடிவுக்கு ஏற்றார் போல் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேர்தல் தோல்வி, தமிழ்நாடு பா.ஜ.க.வில் உட்கட்சி மோதல்: அறிக்கை கேட்கிறது கட்சி மேலிடம்

பெண் காவலரிடம் தகராறு செய்தவர் கைது

அரிவாள்மனையால் அறுத்துக் கொண்ட ரவுடி