மிக்ஜாம் புயல் ஏதிரோலி: தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணியாளர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தினை வழங்க முடிவு

சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யவும் அரசின் நிவாரணப் பணிகளுக்கு தோளோடு தோள் நிற்கும் விதமாக தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணியாளர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தினை வழங்க முடிவு செய்துள்ளனர்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயலின் பாதிப்பானது தமிழக வரலாற்றில் நிகழ்ந்த மிகவும் மோசமான இயற்கைப் பேரிடராகும். தமிழ்நாடு அரசு. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு, பாதிக்கப்பட்டோ காப்பாற்றி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெள்ள நீர் வடிவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. மிக்ஜாம் புயலால் தலைமைச் செயலகப் பணியாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், இக்கட்டான இயற்கைப் பேரிடர் சூழ்நிலையில், எப்போதும் போல், தமிழ்நாடு அரசுடன் தலைமைச் செயலசுப் பணியாளர்கள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள். மேலும், இதைப்போன்ற பேரிடர் நேரங்களிலும் கொரோனாத் தொற்றுப் போன்ற கடுமையான சூழ்நிலைகளிலும் தலைமைச் செயலகப் பணியாளர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தினை அரசின் நிவாரண நடவடிக்கைகளுக்காக வழங்கியுள்ளனர். அந்த அடிப்படையில், தற்போது தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நிவாரணப் பணிகளுக்கு தோளோடு தோள் நிற்கும் விதமாக, தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணியாளர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தினை மிக்ஜாம் நிவாரண மீட்புக்கு வழங்க உள்ளனர்

Related posts

நெல்லை-எழும்பூர் இடையே சிறப்பு வாராந்திர ரயில்களின் சேவை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே

தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களை பதிவு செய்ய தடை..!!

அக்னிபாத் திட்டத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டம் ரத்து.! மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்