எம்வி காமட் கேமர் எடிஷன்

எம்ஜி நிறுவனம், தனது காமட் எலக்ட்ரிக் காரின் கேமர் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. காமட் எலக்ட்ரிக் கார் கடந்த மே மாதம் சந்தைப்படுத்தப்பட்டது. இதில் பேஸ், பிளே, புஷ் என 3 வேரியண்ட்கள் உள்ளன. இந்த காரின் கேமர் எடிஷன் தற்போது அறிமுகமாகியுள்ளது. நாமன் மாத்தூர் என்ற மோர்ட்டல் கேமருடன் இணைந்து இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சக்கரங்கள், கதவு போன்றவற்றில் இதற்கேற்ப பிரத்யேக வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கெனவே சந்தையில் உள்ள காமட் காரின் துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.7.98 லட்சம். இதை விட ஸ்பெஷல் எடிஷன் காரின் விலை ரூ.65,000 அதிகமாகும். தொழில்நுட்ப ரீதியாக எந்த மாற்றமும் இல்லை. இந்தக் காரில் 17.3 கிலோவாட் அவர் பேட்டரி இடம்பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 230 கி.மீ தூரம் வரை செல்லும். இதிலுள்ள மோட்டார் அதிகபட்சமாக 41 பிஎச்பி பவரையும், 76 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

Related posts

3வது முறையாக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகை: 2 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் ஆணைய அறிவிப்பு தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு

டெல்லியில் குடிநீர் வாரிய அலுவலகத்தை அடித்து நொறுக்கி பாஜகவினர் வன்முறை