மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,638 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,159 கன அடியில் இருந்து 13,638 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.140 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 21.20 டி.எம்.சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.50 அடியாக இருந்தது. அதனை தொடர்ந்து பெருமளவு நீர்வரத்து இல்லாத காரணத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக சரிந்துகொண்டே வந்தது.

இதனால் கடந்த 17ம் தேதி 103.50 அடியாக இருந்த நீர்மட்டம் 53 அடியாக சரிந்தது. நீர்மட்ட சரிவின் காரணமாக காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என்ற அச்சம் எழுந்த நிலையில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. கர்நாடக அரசு தரவேண்டிய தண்ணீரை தங்களுக்கு உடனடியாக தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

அதனடிப்படையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவின்படி கர்நாடக அணைகளிலிருந்து கடந்த 8 நாட்களாக நீர்திறப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 10,000 கன அடியாக இருந்து பின்பு இன்று காலை நிலவரப்படி 17,776 கன அடியாக கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதன் காரணமாக ஒகேனக்கல்லிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக ஒகேனக்கல்லில் 10,000 கன அடி வீதமும் 15,000 10,000 கன அடி வீதமும் நீர் வரத்து அதிகரித்து இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லில் 16,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் தொடர்ந்து 6வது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,159 கன அடியில் இருந்து 13,638 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.140 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 21.20 டி.எம்.சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Related posts

காவிரி உரிமையை தமிழ்நாடு அரசு நிலைநாட்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கண்டனம்

ஒடிசா மாநிலம் ஊழல்வாதிகளின் கைகளில் சிக்கி இருக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

திருச்செந்தூரில் நாளை மறுநாள் வைகாசி விசாகம்: பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்