மேட்டுகண்டிகை கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா கோலாகலம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம் சென்னங்காரணி ஊராட்சி மேட்டுகண்டிகை பள்ள கண்டிகை கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலின் தீ மிதி திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 2வது நாள் பக்காசூரன் வதம் 3ம் நாள் திருக்கல்யாணம், 4ம் நாள் நச்சிகுழியாகம், 5ம் நாள் அரக்கு மாங்கோட்டை, 6வது நாள் அர்ஜுனன் தபசு, 7வது நாள் தர்மராஜா வீதியுலா, 8வது நாள் மாடுபிடி சண்டை , 9ம் நாள் துரியோதனன் படுகளம் ஆகியவை நடைபெற்றது.

10வது நாளான நேற்று மாலை கிராம எல்லையில் இருந்து திரவுபதி அம்மன் டிராக்டரில் ஊர்வலமாக தீ மிதிக்கும் இடத்துக்கு கொண்டுவந்தனர். பின்னர் காப்பு கட்டி மஞ்சள் ஆடை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் 274 பேர் அம்மனுடன் ஊர்வலமாக வந்து அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். அப்போது குழுமியிருந்த பக்தர்கள், பக்தி கோஷங்கள் எழுப்பினர்.

இன்று அரவான் இறுதி சடங்கு நிகழ்ச்சியுடன் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் சென்னங்காரணி, மேட்டுக்கண்டிகை, பள்ள கண்டிகை மற்றும் பெரம்பூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏ ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Related posts

மராட்டிய மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நியமனம்

திருவொற்றியூரில் பெண்ணை முட்டிய மாட்டுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை: மாநகராட்சி விளக்கம்

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை: டிடிவி தினகரன் விமர்சனம்