மே விடுமுறை தினம் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இன்று இயக்கம்

சென்னை : மே 1ம் தேதி (இன்று) அரசு விடுமுறை தினம் என்பதால் மெட்ரோ ரயில் சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கப்படுகிறது. அதன்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் சேவை இயங்கும். காலை 8 மணி முதல் நண்பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

மேலும் காலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும், நண்பகல் 11 மணியிலிருந்து மாலை 5 வரையிலும், இரவு 8 லிருந்து 10 வரையில் 7 நிமிடத்திற்கு ஒருமுறையும், இரவு 10 லிருந்து இரவு 11 மணி வரையில் 15 நிமிடத்திற்கு ஒருமுறையும் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 93 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதால் மக்கள் நிம்மதி

வீட்டு மின் இணைப்பை துண்டித்ததை எதிர்த்த முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்களை இரண்டாம் கட்டமாக தேர்வு செய்யும் பணி தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது