கருணை அடிப்படையில் பணி நியமனம்: அமைச்சர் வழங்கினார்

சென்னை: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்படும் தொழிற் பயிற்சி நிலைய பயிற்சியாளர்களின் படைப்பு திறன்களை வெளிக்கொணரும் பொருட்டு 6வது மாநில அளவிலான போட்டி நடைபெற்றது. இதில் 16 பயிற்சியாளர்கள் வெற்றி பெற்றனர். மேலும், 57வது மாநில அளவிலான திறன் போட்டிகளில் 6 பயிற்சியாளர்கள் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு பரிசு, சான்றிதழை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில் பணியின்போது மரணமடைந்த 9 அரசு பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்.

Related posts

டி20 உலகக் கோப்பை: வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சிபோட்டியில் 182 ரன்களை குவித்தது இந்திய அணி

ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் மொட்டையடித்துக் கொள்வேன் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பார்த்தி