வணிகர்களுக்கான சமாதான திட்டம் மார்ச் 31ம் வரை நீட்டிப்பு: வணிகவரித்துறை செயலாளர் தகவல்

சென்னை: வணிகர்களுக்கான சமாதான திட்டம் மார்ச் 31ம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட அறிக்கை: 2023ம் ஆண்டு, தமிழ்நாடு வரிகள் (நிலுவைகளை தீர்வு செய்தல்) சட்டத்தின் கீழ் பழைய வரி நிலுவைகள் தொடர்பான சமாதான திட்டம் 2023ம் ஆண்டு அக்.16ம் தேதிமுதல் பிப்.15ம் தேதி வரை நடைமுறைப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 9594 விண்ணப்பங்கள் வணிகர்களிடமிருந்து பெறப்பட்டு 2024ம் ஆண்டு பிப்.15ம் தேதி வரை ரூ.170 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. வணிகர்களின் கோரிக்கையை ஏற்று இச்சமாதான திட்டமானது மேலும் ஒன்றரை மாதங்கள் அதாவது மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

தனது நீண்ட ஆண்டுகள் பொது வாழ்வில் தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்: கலைஞர் பிறந்தநாளில் பிரதமர் மோடி வாழ்த்து

ஒவ்வொரு இவிஎம்-ல் பதிவான வாக்குகள் எண்ணி முடித்த பிறகு அனைத்து முகவர்களும் சரிபார்த்த பிறகே அடுத்த இயந்திரத்தை எண்ண வேண்டும் : தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது: வரும் 21ம் தேதி விண்ணப்பிக்கலாம்