மெஞ்ஞானபுரம் அருகே குட்டையில் வாலிபர் உடல் மீட்பு

*கொலையா? என போலீசார் விசாரணை

உடன்குடி : மெஞ்ஞானபுரம் அருகே தேங்கிய குட்டையில் வாலிபர் உடல் அடையாளம் தெரியாத நிலையில் மிதந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள நயினார்பத்து பகுதி உடன்குடி அனல்மின் நிலையத்தின் பின்புறத்தையொட்டிய பகுதி ஆகும். அனல்மின்நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். மேலும் மெஞ்ஞானபுரம், குலசேகரன்பட்டினம் காவல்நிலைய எல்கைகள் அடுத்தடுத்து உள்ளதால் அந்த காட்டுப்பகுதிகளில் சூதாட்டம் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அரங்கேறுவது தொடர்கதையாகும்.

இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள குட்டையில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. அதில் சுமார் 30வயது மதிக்கதக்க வாலிபர் உடல் மிதந்தது. ஜீன்ஸ் பேண்ட், கோடு போட்ட சட்டை அணிந்த நிலையில் அந்த வாலிபர் காணப்பட்டார். இது குறித்து அந்த பகுதிக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றவர்கள் மெஞ்ஞானபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார், இறந்து கிடந்த வாலிபர் யார்? அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு