குளித்தலை தொகுதியில் முன்னாள் முதல்வர் கலைஞருக்கு நினைவுச் சின்னம்: அமைச்சர் சாமிநாதன் தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது குளித்தலை மாணிக்கம்(திமுக) பேசுகையில் ‘‘நங்கவரத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு நினைவுச்சின்னம் அமைக்க அரசு ஆவண செய்யுமா? ” என்றார். இதற்கு பதில் அளித்து செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், ‘‘மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் போராட்டம் வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டியது.

தாய்மொழிக்கான போராட்டம், விவசாயிகளுக்கான போராட்டம், தொழிலாளர்களுக்கான போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். குளித்தலையில் விவசாயிகளுக்காக அவர் போராடிய போராட்டம் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. அவரது பிறந்த நாளான நூற்றாண்டு விழாவில் குளித்தலையில் கலைஞர் நினைவுச் சின்னம் அமைக்க முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசீலிக்கப்படும்”, என தெரிவித்தார்.

Related posts

பீகார், ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிவால் போராட்டம்; 1,563 தேர்வருக்கு வழங்கிய கருணை மதிப்பெண் செல்லுமா?.. உயர்நிலை குழு விசாரணை தொடங்கியது; தேர்வு ரத்தாகுமா?

காஷ்மீரில் பேருந்து மீது தீவிரவாத தாக்குதல்: 10 பேர் பலி

ஆமாம்… நான் ஒரு பெண் சிங்கம்: சோனியா கூறிய வீடியோ வைரல்