ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணி இன்று துவங்கியது

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில், வரையாடுகள் கணக்கெடுப்பு பணி இன்று காலை துவங்கியது. இப்பணியில் வனத்துறையினர் சுமார் 100 பேர் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான வனவிலங்கு வசித்து வருகின்றன. குறிப்பாக புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான்கள் மற்றும் வரையாடுகள் போன்றவை அதிகமாக வசித்து வருகின்றன. வருடத்திற்கு ஒரு முறை புலி, யானை மற்றும் பொது விலங்குகள் கணக்கெடுப்பு தனித்தனியாகவும், சாம்பல் நிற அணில்கள் கணக்கெடுப்பு பணியும் நடைபெறும்.

அந்த வகையில், தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதன்முறையாக வரையாடு கணக்கெடுப்பு பணி வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் இன்று காலை துவங்கியது. இப்பணியில் வனத்துறையினர் சுமார் 100 ேபர் ஈடுபட்டுள்ளனர். இன்று துவங்கிய இப்பணி மே 1ம் தேதி மாலை வரை நடைபெறுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையை பொறுத்தவரை மலை உச்சியிலேயே வரையாடுகள் அதிகமாக வசித்து வருகின்றன. சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களை தேர்வு செய்து வனத்துறையினர் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தேவராஜ் உத்தரவின் பேரில் ரேஞ்சர் கார்த்திக் தலைமையில் வனத்துறையினர் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

ஸ்லோவாக்கியா துப்பாக்கிச்சூடு: பிரதமர் கண்டனம்

தேசிய நெடுஞ்சாலையில் 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி

நாகை – இலங்கை இடையே மே 19-ல் கப்பல் போக்குவரத்து தொடக்கம்