தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை கர்நாடக அரசால் கட்ட முடியாது: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

மதுரை: தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை கர்நாடக அரசால் கட்ட முடியாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்; ஒடிசா ரயில் விபத்து மனித உள்ளங்களை உருக்கி, கசக்கி பிழிகிற விபத்தாக தான் நிகழ்ந்துள்ளது. உலக நாடுகளை தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் கூடிய விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன் என கூறினார்.

மேகதாது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்; மேக்கேதாட்டு அணை பற்றி விரிவான அறிக்கையை ஏற்கனவே கொடுத்துள்ளேன். தமிழ்நாட்டின் அனுமதி, அங்கீகாரம் இல்லாமல் மேக்கேதாட்டுவில் கர்நாடகா அரசு அணை கட்ட முடியாது. இதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளது என கூறினார். முன்னாள் அமைச்சர் மைத்ரேயன் பாஜகவில் இணைந்திருப்பது தொடர்பான கேள்விக்கு மைத்ரேயன் எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்தினார்.

Related posts

தேனியில் யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது: கோவை மாநகர சைபர் கிரைம் நடவடிக்கை

சென்னையில் விமானம் தாமதம் காரணமாக லண்டன் செல்ல வேண்டிய பயணிகள் தவிப்பு

தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது கத்திரி வெயில்; வெப்ப அலை வீசக்கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை