மீஞ்சூர் அருகே 20 ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள்

பொன்னேரி: மீஞ்சூர் அருகே நேற்று மாலை பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட பயிற்சி அளிக்கும் வகையில் ஒரு தனியார் தொண்டு நிறுவனம், 20 பெண்களுக்கான தையல் இயந்திரங்களை ஒன்றிய செயலாளர் காணியம்பாக்கம் ஜெகதீசனிடம் வழங்கப்பட்டது.

மீஞ்சூர் அருகே மெரட்டூரில் குருசேட் எனும் தனியார் மகளிர் தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு அப்பகுதி பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட தையல் உள்பட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சி பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு அதிகளவில் பெண்கள் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு பெறும் வகையில் 20 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள் கேட்டு வலியுறுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று மாலை குருசேட் மகளிர் தொண்டு நிறுவனம் சார்பில் 20 பெண்களின் மேம்பாட்டுக்காக இலவச தையல் இயந்திரங்களை மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் காணியம்பாக்கம் ஜெகதீசனிடம் வழங்கப்பட்டது. பின்னர் அவற்றை 20 பெண்களுக்கு வழங்கினார். இதில் லண்டன் அண்டி ரிவிதர் போர்ட், குருஷேக் மகளிர் தொண்டு நிறுவனர் ஜோதி ராமலிங்கம், மேற்பார்வையாளர் சக்திவேல், இணை மேற்பார்வையாளர் ரூத், ஜெயபாரதி, குமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி

ஹெலிகாப்டர் விபத்து: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோர் காலமானதை கேள்விப்பட்டு ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன்: அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்

கனமழை எச்சரிக்கை.. 2.66 கோடி செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது: பேரிடர் மேலாண்மை துறை தகவல்