மீஞ்சூர், மேட்டுப்பாளையம் பொன்னேரி வரை சென்டர் மீடியன் இரு புறமும் மணல் திட்டுகள் அகற்றம்

பொன்னேரி: மீஞ்சூர், மேட்டுப்பாளையம் மற்றும் பொன்னேரி வரை உள்ள சென்டர் மீடியன் இரு புறமும் உள்ள மணல் திட்டுகள் அகற்றப்பட்டால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி – திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனின் இருபக்கமும் உள்ள மணல் குவியல்கள் தேங்கிக் கிடக்கின்றன. மணலி புதுநகர், பழைய நாப்பாளையம், புதிய நாப்பாளையம், வெள்ளிவாயல் சாவடி, கொண்டக்கரை, பட்டமந்திரி, மேலூர் வல்லூர், புங்கம்பேடு, பீடியோ ஆபிஸ், வேளச்சேரி செல்லும் 400 அடிசாலை மற்றும் மீஞ்சூர் பஜார், நாலூர், மேட்டுப்பாளையம், இலவம்பேடு, புளிக்குளம், தடப்பெரும்பாக்கம் பொன்னேரி வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம்வரை இந்த மணல் குவியல் காணப்படுகிறது. இச்சாலையின் வழியாக லாரி, பஸ், கனரக வாகனங்கள் செல்லும்போது, மணல் துகள்கள் காற்றில் பறந்து, வாகன ஓட்டிகளின் கண்களில் பட்டு, அவர்கள் கீழே தவறி விழுந்து அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.

சமூக ஆர்வலர்கள் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பலர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மெத்தன போக்கே அடிக்கடி விபத்து காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டு வந்தனர். இந்நிலையில், தினகரன் நாளிதழ் இரண்டு தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானதை தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் முதல் ஊழியர்கள் மீஞ்சூர், மேட்டுப்பாளையம் பொன்னேரி வரை சாலையின் இரு பக்கம் உள்ள மணல் திட்டுகளை அப்புறப்படுத்தினர். இதனால், மீஞ்சூர் பொன்னேரி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தினகரன் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

Related posts

ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசரை வைத்து இடிப்பார்கள்: காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

குமரியை சேர்ந்த தமிழக பாஜ மாநில நிர்வாகி 1200 கோடி சுருட்டினாரா?.. பரபரப்பாகும் ஆடியோ வைரல்

சேதமாகி கிடக்கும் சாலை பார்வதிபுரம் மேம்பாலத்தில் பராமரிப்பு பணி செய்யப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு