மதிமுக தீயின் பொறி.. திராவிட நெறி.. தேர்தலே வெறி.. துரை வைகோ: வைரமுத்து வாழ்த்து.

சென்னை : மதிமுக வேட்பாளர் துரை வைகோவிற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் வைகோவின் மகன் துரை வையாபுரி திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் பல தலைவர்களை சந்தித்து வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெற்று வருகிறார். இந்த நிலையில் இன்று கவிஞர் வைரமுத்து அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்,
” நாடாளுமன்றத் தேர்தலுக்கு
வாழ்த்துப்பெற வந்தார்
திருச்சி வேட்பாளர்
தம்பி துரை வையாபுரி
தீயின் பொறி
திராவிட நெறி
தேர்தலே வெறி
திருச்சியே குறி
நிறைவெற்றி காண்பார்
துரை வையாபுரி” இவ்வாறு தனது வாழ்த்துக்களை கூறி பதிவிட்டுள்ளார்.

 

 

Related posts

டி20 உலகக் கோப்பை: வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சிபோட்டியில் 182 ரன்களை குவித்தது இந்திய அணி

ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் மொட்டையடித்துக் கொள்வேன் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பார்த்தி