சிலம்பாட்ட போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள்

கூடுவாஞ்சேரி: சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்று மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் உள்ள சிலம்பாட்ட கழகத்தின் சார்பில், சிலம்பாட்ட போட்டி கடந்த வாரம் கூடுவாஞ்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில், கூடுவாஞ்சேரி அமுதா பாண்டியன் சிலம்பம் பயிற்சியகம் சார்பில் கலந்து கொண்ட 29 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இதில், முதல் பரிசு 8 பேரும், இரண்டாம் பரிசு 7 பேரும், மூன்றாம் பரிசு 14 பேரும் பெற்றனர். இந்நிலையில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா கூடுவாஞ்சேரி அடுத்த விஷ்ணு பிரியா நகரில் உள்ள கராத்தே அகாடமியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், சிலம்பாட்ட கழக நிர்வாகி செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கராத்தே மற்றும் சிலம்பம் அகாடமியின் நிறுவனர் கராத்தே பாண்டியன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 29 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்று மற்றும் பரிசுகளை வழங்கினார். இதில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், கலந்துகொண்டனர்.

Related posts

காட்பாடியில் 3 மாதங்களாக சிறுமியை மிரட்டி சிறுவன் சில்மிஷம் போக்சோ வழக்குப்பதிவு

காட்பாடியில் துணிகரம் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 8 சவரன் திருட்டு

அதிமுக தொண்டர்கள் அனைவரும் விரைவில் ஒன்றிணைந்து வருவார்கள் வேலூரில் டிவிவி தினகரன் பேட்டி