கட்டிட பணியின்போது சுவர் சரிந்து விழுந்ததில் மேஸ்திரி பரிதாப பலி

புழல்: பழைய வீட்டு சுவரை அப்புறப்படுத்தியபோது சுவர் திடீரென சரிந்து விழுந்ததில் கட்டிட மேஸ்திரி பரிதாபமாக பலியானார். சென்னை புழல் திருவிக தெருவைச் சேர்ந்தவர் சின்னசாமி (59). இவர் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். இவரது வீட்டு பக்கத்தில் வசிக்கும் பன்னீர்செல்வம் என்பவரின் பழைய வீட்டை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலையில் சின்னசாமி கட்டிடப் பணிகளை பார்வையிட கட்டிடப்பணி நடைபெறும் இடத்துக்குச் சென்றார்.

அங்கு அவர் கட்டிடத் தொழிலாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென பக்கவாட்டு சுவர் சரிந்து சின்னசாமி மீது விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய சின்னசாமி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சின்னசாமியின் சடலத்தை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து

குமரியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுவதால் எச்சரிக்கை

கேரள மாநிலம் இன்றும் 2-வது நாளாக நில அதிர்வு