மருது சகோதரர்களின் 222வது நினைவு தினத்தை ஒட்டி சிவகங்கை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

சிவகங்கை: மருது சகோதரர்களின் 222வது நினைவு தினத்தை ஒட்டி சிவகங்கை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மருதுபாண்டியர் நினைவு நாளையொட்டி சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிக்கு அக்.27ல் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மருது சகோதரர்கள் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்களாவர். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளாகினர்.

இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இருவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது.

இந்நிலையில் மருது சகோதரர்களின் 222வது நினைவு தினத்தை ஒட்டி சிவகங்கை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மருதுபாண்டியர் நினைவு நாளையொட்டி சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, திருப்பத்தூர், காளையார்கோவில், இளையான்குடி, தேவகோட்டை ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிக்கு அக்.27ல் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

அறிவை வளர்த்தோம்… தன்னம்பிக்கை பெற்றோம்… லண்டனில் பயிற்சி முடித்து திரும்பிய மாணவர்கள் முதல்வருடன் உற்சாகமாக கலந்துரையாடல்

அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை: மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி