தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம்: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த குடும்பத்தினர்..!!

சென்னை: தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில், தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்தமைக்காக, தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் மகள் திருமதி. பிரபாராணி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ஏ.கே.எஸ். விஜயன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.காதர்பாட்சா முத்துராமலிங்கம், திருமதி.ர.தமிழரசி, திரு.சண்முகையா, திரு.செ.ஸ்டாலின் குமார். திரு.செ.முருகேசன். திருமதி.க.சிவகாமசுந்தரி, திரு.ராஜா ஈஸ்வரன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திரு. அ. அசோகன், மக்கள் விடுதலை கட்சியின் நிறுவனரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான திரு. முருகவேல்ராஜன். தேவேந்திரர் பண்பாட்டு கழகத்தின் தலைவர் திரு. பாலன், திரு. பாலு, திரு. செல்வகுமார். திரு. பூமிநாதன், திரு. சுரேஷ், திரு. மாரியப்பன், திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு. சங்கர், திரு. அய்யப்பன், திரு. சிவக்குமார். திரு.எம்.ஆர். சங்கர் ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Related posts

மனநலம் பாதிப்பால் காணாமல் போன விமானப்படை அதிகாரி 92 வயது தாயுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்: 33 ஆண்டுக்கு பிறகு ஓய்வூதியமும் கிடைத்தது

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல்

லஞ்ச வழக்கில் பிடிபடும் ஊழியரை விடுவிப்பது உடலில் கேன்சர் செல்லை செலுத்துவது போலாகும்: சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கருத்து